ஸ்டாலின் படத்துடன் அகராதி விநியோகம்

திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 45,000 மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகளை அரசு, தனியார் பள்ளிகளில் திமுகவினர் விநியோகித்தனர். “ஸ்டாலின் புகழை மாணவர்கள் மூலம் பெற்றோர் வரை கொண்டு செல்லத் திட்டமிட்டோம். இதற்காக கட்சியின் தேர்தல் பணிக் குழு, மதுரை கிழக்குத் தொகுதியிலுள்ள மாணவர்களைக் கணக்கெடுத்து அகராதிகளை வழங்கியது. “அகராதிகளில் உள்ள அட்டைப் படத்தை நீக்கிவிட்டு நாங்கள் தயாரித்த அட்டைப் படத்தை இணைத் தோம். அதில், ‘தமிழக தளபதியின் 64ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு’ என்ற வாசகத்துடன் ஸ்டாலின் படங்கள், உதயசூரியன் சின்னத்துடன் உள்ளன,” என்றனர் திமுகவினர். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு