மாநில வரைபடத்தில் மாயமான கரியம்பட்டி கிராமம்

வேலூர்: தமிழக வரைபடத்தில் தங்களது கிராமம் மாயமாகி உள்ளதை அறிந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம், பள்ளத்தூர் ஊராட்சியில் உள்ள கரியம்பட்டி என்ற கிராமம் தற்போது வரைபடத்தில் இடம்பெற வில்லை. கடந்த சில ஆண்டுகளாக அக்கிராமம் தங்களது ஊராட்சியில் இடம்பெறவேண்டும் என பள்ளத்தூர், நரியனேரி ஊராட்சித் தலைவர்களிடையே மோதல் இருந்து வருகிறது. இந் நிலையில், மாநில வரைபடத்தில் தங்கள் கிராமம் மாயமானதால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.