எஸ்ஐஏ கட்டுப்பாட்டில் ‘டைகர்ஏர்’

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், டைகர் ஏர்வேஸ் மலிவுக் கட்டண விமான நிறுவனத்தை முழுமையாக தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி டைகர் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப் படுத்தும் திட்டத்தை வெளி யிட்டது எஸ்ஐஏ. அப்போது டைகர் ஏர்வேசை பதிவிலிருந்து அகற்றவும் தனியார் மயமாக்கவும் எஸ்ஐஏ விருப்பம் தெரிவித் தது. சென்ற பிப்ரவரி 5ஆம் தேதி டைகர் ஏர்வேசில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பங்கு 90 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. இது, டைகர் ஏர்வேசை பங்குச் சந்தை பட்டியலி லிருந்து அகற்றுவதற்குப் போதுமானதாகும். பிப்ரவரி 26ஆம் தேதி மலிவுக்கட்டண விமான நிறுவனத்தை 95.6% மேல் கையகப்படுத்த இணங்குவதாகவும் கட்டுப் படுத்துவதாகவும் எஸ்ஐஏ அறிவித்தது-.