கிரீஸில் தவிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள்

ஏதென்ஸ்: ஐரோப்பிய நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30,000க் கும் மேற்பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் தவிக்க நேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளைச் சென்று சேரும் அவர்கள் அங்கிருந்து நடைப் பயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வரு கின்றனர்.

ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. சென்ற ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதல், அண்மையில் ஜெர்மனியில் பல பெண்கள் இளையர் கும்பலால் மானபங்கம் செய்யப்பட்டது போன்ற பிரச்சினைகளால் அகதி களுக்கு எதிரான மனப்போக்கு ஐரோப்பிய மக்களிடம் உருவாகி உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை முழுமையாக மூடியுள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்