சுடச் சுடச் செய்திகள்

பாலியில் படகு மூழ்கியது; மீட்புப் பணிகள் தீவிரம்

பாலி: இந்தோனீசியாவின் பாலித் தீவு நீரிணைப் பகுதியில் நேற்று ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 41 லிருந்து 70 பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரத்துவ தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அப்படகில் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்பது இன்னும் தெரியவில்லை. பாலியில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அப்படகு கிழக்கு ஜாவாவில் உள்ள துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது நீரிணைப் பகுதியில் மூழ்கியது. காணாமற்போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon