டோனல்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடிய மிட் ரோம்னி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு 2012ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டிக் களத்தில் இறங்கி திரு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய மிட் ரோம்னி, தற்போது அதிபர் பதவிக்கு போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டோனல்ட் டிரம்ப் மீது நேரடித் தாக்குதலில் இறங்கியுள்ளார். குடியரசுக் கட்சியினரிடையே உரையாற்றிய மிட் ரோம்னி, திரு டிரம்பை கடுமையாகக் குறை கூறினார்.

டோனல்ட் டிரம்ப் ஒரு மோசடிப் பேர்வழி என்றும் அதிபர் பதவியை வகிக்க அவர் தகுதியற்றவர் என்றும் மிட் ரோம்னி கூறினார். டிரம்ப் அவ்வப்போது ஒரு பாதையை தேர்ந்தெடுக்கும் போலி நபர் என்றும் அவர் இந்த நாட்டையும் கட்சியையும் வழிநடத்த தகுதியற்றவர் என்றும் ரோம்னி மேலும் கூறினார். குடியரசுக் கட்சியினர் யாரும் அவரை ஆதரிக்கக்கூடாது என்றும் அப்படி அவரை ஆதரித்தால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனின் வெற்றிக்கு அது வழிவகுத்து விடும் என்றும் திரு ரோம்னி கூறினார்.

Loading...
Load next