இரு அழகிகளுடன் விஜய் சேதுபதி

‘நானும் ரவுடிதான்’ வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி ஜோடி மீண்டும் இணைகிறது. விக்னேஷ் சிவன் படமென்றால் கதாநாயகி நயனாகத்தானே இருக்கும். ஆம், அந்த ஒரு அழகி நயன்தாராதான். ஆனால், மற்றொரு அழகி யார் தெரியுமா? ஆம், திரிஷாவேதான். இதற்கே ஆச்சர்யப்படவேண்டாம். படத்தின் தலைப்பு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. எப்படிப்பா விஜய் சேதுபதிக்கு இப்படியெல்லாம் படம் அமையுது என்று மற்ற நாயகன்கள் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளும் அளவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்தில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், இப்படத் தின் கூட்டணி மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான ‘சேதுபதி’ திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்