படகு என்ஜின் வெடித்து 60 பேர் காயம்

பேங்காக்: தாய்லாந்தில் ஒரு படகின் என்ஜின் வெடித்ததில் 60 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமுற்றவர்களில் பெரும் பாலானோர் தீப்புண் காயங்களுக் காக மருத்துவமனைகளில் சேர்க் கப்பட்டதாகவும் அவர்களில் பலர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி யதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் கூறின.

காயமடைந்தவர்களில் மூவர் வெளிநாட்டினர். அம்மூவரில் இருவர் மியன்மார் நாட்டவர்; ஒருவர் ஜப்பானியர். படகு என்ஜின் வெடித்ததில் சிதறிய துகள்களால் படகுப் பயணிகளில் இருவர் பலத்த காயம் அடைந்ததாக பேங்காக் போலிஸ் ஆணையாளர் சனிட் மகாதவோன் கூறினார். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய கால்வாயில் நேற்று பயணிகள் படகு சென்று கொண்டிருந்தபோது அதன் என்ஜின் வெடித்தது. படகின் பின்பகுதியில் எரிவாயு கசிந்து தீப்பற்றிக்கொண்டதால் படகு என்ஜின் வெடித்ததாக ஆரம்பக்கட்ட புலன் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது என்று போலிசார் கூறினர்.

Loading...
Load next