விசாகப்பட்டினம்: இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத் தில் தொடங்கவுள்ளது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டி சமநிலையில் முடிந்தது.
ராஜ்கோட் ஆடுகளம் பந்தடிப்புக்கு ஏற்ற வகையில் இருந்தது. ஆனால் விசாகப் பட்டிணம் மைதானம் 2வது நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் இந்தியா ஆதிக்கம் புஜாரா, அணித் தலைவர் கோஹ்லி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்டில் 5 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. இன்றும் இதே நிலை நீடிக்குமா என்று தெரிய வில்லை.
நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் லோகேஷ் ராகுல். படம்: ஏஎஃப்பி