உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்பந்து ஆட்டமொன்றில் அர்ஜெண்டினா- கொலம்பியா அணிகள் மோதின. இதில் கொலம்பியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜெண்டினா. தனது அணிக்கான முதல் கோலை 10வது நிமிடத்தில் போட்டார் மெஸ்ஸி. அவரைத் தொடர்ந்து லுகஸ் பிராட்டோ, ஏங்சல் டி மரியா ஆகிய இருவரும் அடுத்தடுத்து கோல்களைப் போட, கொலம்பியா ஆட்டம் முடியும் வரை கோல் எதுவும் போடததால் 3-0 என அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
கடந்த நான்கு ஆட்டங்களில் விளையாடி வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு இந்த வெற்றி உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெறும் என்ற நம்பிக்கையை அளித்து உள்ளது.
தனது அணி வீரர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த மெஸ்ஸி, இனி ஊடகங்களுடன் பேசப்போவது இல்லை என்று கூறினார். படம்: இணையம்