படித்தவர்கள் கோழைகளாக உள்ளனர்: சகாயம் வேதனை

மதுரை: "இந்தியாவில் ஊழல், சுரண்டல், பித்தலாட்டம் போன்றவை சாதாரணமாக நடக்கின் றன. படித்தவர்கள் எல்லாம் கோழையாகவும் சுயநலவாதியாக வும் இருக்கிறார்கள். ஒரு மாவட்ட ஆட்சியரால் இந்த சட்டத்தைக் கூட அமல்படுத்த முடியவில்லை," என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேதனையுடன் பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நூற் றாண்டு விழா மதுரையில் 'சோக் கோ அறக்கட்டளை' சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது.

இந்த விழாவில் பேசிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், "நான் விருது பெறும் அளவுக்குப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 24 ஆண்டுகள் பணியாற்றிய எனக்கு 23 முறை பணி மாறுதல் கிடைத்தது. இதுவே எனக்கு கிடைத்த விருதாக நான் பார்க்கிறேன். நான் இந்த சமூகத்தை உளமாற நேசிக்கிறேன். இதுவே எனக்கு இந்த விருது பெறத் தகுதி.

"இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்துவது மிகக் கடின மான விஷயம். 2009ஆம் ஆண்டு நான் ஒரு தவறு செய்தேன். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நாட்டின் முதுகெ லும்பான கிராமத்தின் நிர்வா கத்தை நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கி பணியாற்ற வேண்டும் என உத் தரவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. அந்தக் கிராமத்தில் இல்லாமல் அந்தக் கிராம மக்க ளுக்கு அவர்கள் எவ்வாறு உரிய நேரத்தில் பணியாற்ற முடியும்?

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!