நேரில் சந்தித்துப் பேசிய ரஜினி, கமல்

தமிழ்ச் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த ரகசியம். இருவரும் நேரில் சந்தித்துக்கொள்வது அரிதான விஷயம். அண்மையில் ரஜினியும் கமலும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். சென்னையில் உள்ள கமலின் வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. கமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிப்படியில் இருந்து கால் தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் ஒரு மாதம் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதேபோல் ரஜினியும் '2.ஓ' படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்து திரும்பினார். இவர்களுடைய சந்திப்பில் இருவரும் தங்களின் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டார்களாம். பின்னர் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!