எது உண்மையான ஆயுதம் என்பதை விவரிக்கும் ‘பலசாலி’

இயக்குநர் சிவகார்த்திக் இயக்கத்தில் சாண்டி, மானசா நடிக்கும் படம் ‘பலசாலி’. “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும்தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லும் படம் தான் ’பலசாலி’. “பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்கிறோம்.

“பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான நாயகனை பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால் என் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை கதை நாயகன் சாதாரண ஆளாகத்தான் இருப்பான். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனைவிட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்க சிரிக்க வைப்பதாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் சிவகார்த்திக்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘பிகில்’ படத்தில் நடித்து முடித்ததும் கால்பந்து தொடர்பான அனைத்தும் அத்துபடியாகிவிட்டது,” என்கிறார் வர்ஷா.

12 Nov 2019

விஜய்யை ரசித்த வர்ஷா

‘’இருட்டு’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

12 Nov 2019

துரை: என்னை பிரமிக்கவைத்தார் சுந்தர்.சி

தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறார் நாயகி ராஷ்மிகா. படம்: ஊடகம்

11 Nov 2019

ராஷ்மிகா: கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் உரிமையில்லை