வெள்ளிக்கு எதிராக மலேசிய ரிங்கிட் நாணயம் வீழ்ச்சி

மலேசியாவின் ரிங்கிட் நாணயம் நேற்று சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக, 2015 செப்டம்பருக்குப் பிறகு ஒருபோதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஒரு வெள்ளிக்கு 3.0961 ரிங்கிட் என்று நேற்று முற்பகல் 10.15 மணிக்கு வர்த்தகம் நடந்தது. புதன்கிழமை பரிவர்த்தனை ஒரு வெள்ளிக்கு 3.0682 ரிங்கிட் என்று இருந்தது.

மலேசிய நாணயம் ஓராண்டுக்கும் மேற்பட்ட காலமாக மதிப்பு இறங்கி வருகிறது. நாணயச் சந்தையில் ஊக வர்த்தகங்களை வரம்புக்குட்படுத்த மலேசியாவின் மத்திய வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் ரிங்கிட் தொடர்ந்து மதிப்பு குறைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக நேற்று முற்பகல் 10.17 மணிக்கு ரிங்கிட் மதிப்பு 4.3695 ஆக இருந்தது. இது புதன்கிழமை நிலவிய அளவைவிட 0.5% கூடுதல். இருந்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு ஏற்றஇறக்கமாகவே நேற்று இருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது