பூகிஸ் ஜங்ஷன் விசைப்படியில் பாதம் சிக்கி ஆடவர் காயம்

பூகிஸ் ஜங்ஷனில் இருக்கும் விசைப்படி ஒன்றில் ஓர் ஆடவரின் பாதம் மாட்டிக்கொண்டது. இத னால் அவர் காயம் அடைந்தார். அவர் சுமார் 1 மணி நேரம் சிக்கிக் கொண்டதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர். சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை, பல சாதனங்களைப் பயன்படுத்தி விசைப்படியிலிருந்து அவரை விடுவிக்கவேண்டிய தாயிற்று.

20க்கும் அதிக வய துள்ள அந்த ஆடவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக குடி மைத் தற்காப்புப் படை தெரி வித்தது. அங்கு அவருக்கு கால்விரல் காயத்திற்குச் சிகிச்சை அளிக்கப் பட்டதாக பூகிஸ் ஜங்ஷன் தலைமை நிர்வாகி திருவாட்டி இவி ஆங் தெரிவித்தார்.

பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் விசைப்படியில் மாட்டிக் கொண்ட ஆடவர் மீட்கப்படுகிறார். படம்: லியான்ஹ வான் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!