நிதி நிறுவனங்களின் இணையப்பாதுகாப்புக்கு முன் னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாங்கத் தலைவர்களும் தொழில்துறைத் தலைவர்களும் நேற்று கோரிக்கை விடுத்தனர். மின்னியலாக்கம், புத்தாக்கம் போன்ற நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டிருந்தாலும் இணையப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என்று நேற்று நடைபெற்ற தொழில்நுட்ப ஆபத்துகளைப் பற்றிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கை சிங்கப்பூரின் வங்கிகள் சங்கமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் இணைந்து நடத்தின. இணைய மிரட்டல்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ளுதல் மட்டும் நோக்கமாக இருக்க முடியாது என்றும் அப்படித் தாக்குதல்கள் நேர்ந்தால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்தரங்கில் பேசிய சிங்கப்பூரின் வங்கிகள் சங்கத்தின் தலைவர் வீ ஈ சியோங் கூறினார்.