பந்து தாக்கி ஆஸி. வீரர் காயம்

பெர்த்: எதிரணி ஆட்டக்காரர் வீசிய பந்து கழுத்தைப் பதம் பார்த்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் வோஜஸ், 37, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தாஸ்மானியா அணிக்கு எதிரான ஷெஃபீல்டு கிண்ணப் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணி சார்பில் களம் கண்டார் வோஜஸ். 16 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கேமரன் ஸ்டீவன்சன் வீசிய 'பவுன்சர்' பந்து வோஜசின் கழுத்தில் பலமாகத் தாக்கியது. அதனால் மூளை அதிர்ச்சி ஏற்பட, அங்கேயே அமர்ந்துவிட்டார் வோஜஸ். திடலில் முதலுதவி அளிக்கப்பட்டபின் அவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டு, பின் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு இதுபோன்று பந்து தலையில் தாக்கியதால் திடலிலேயே நிலைகுலைந்த ஆஸி. வீரர் ஃபிலிப் ஹியூஸ் இரு நாட்களுக்குப் பின் மருத்துவ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!