இரு சதங்களால் நிமிர்ந்த இந்தியா

விசாகப்பட்டினம்: சேத்தேஸ்வர் புஜாரா, அணித்தலைவர் விராத் கோஹ்லி என இருவர் சதம் விளாச, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களைச் சேர்த்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி 'டிரா'வில் முடிந்தது. இதனால் 2வது ஆட்டத்தில் வென்று முன்னிலை பெற இரு அணிகளும் கங்கணம் கட்டி இருக்கின்றன.

முதல் போட்டி நடந்த ராஜ்கோட் போலவே முதன்முதலாக டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது விசாகப்பட்டினம் ஒய். எஸ்.ராஜசேகர ரெட்டி விளையாட்ட ரங்கம். இரு அணிகளிலும் மாற் றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியில் கம்பீர், மிஸ்ரா ஆகியோ ருக்குப் பதிலாக லோகேஷ் ராகுலும் அறிமுக வீரராக ஜெயந்த் யாதவும் சேர்க்கப்பட்டனர். இங்கி லாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் இடத்தைப் பிடித்தார் காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன்.

திடலில் திடீரென நாய் ஒன்று புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட, சில நிமிடங்கள் முன்னதாகவே தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. நாய் அங்குமிங்கும் ஓடியதைக் கண்டு சிரித்து மகிழும் சத நாயகர்கள் கோஹ்லி (இடது), புஜாரா. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!