டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர்

நியூயார்க்: அமெரிக்கா வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே அமெரிக்க அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்பை சந்தித்துப் பேசவுள்ளார். தேர்தலில் திரு டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் திரு அபே ஆவார். நியூயார்க்கில் நேற்று பின் னேரத்தில் அவ்விருவரும் சந்தித்துப் பேசவிருந்தனர். இரு நாட்டு உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேச்சு நடத்தவிருந்த தாகக் கூறப்பட்டது.

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான நம்பிக்கையை கட்டிக்காக்க விரும்புவதாக திரு டிரம்பிடம் தான் கூறவிருப்பதாக திரு அபே கூறினார். ஜப்பானின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவின் எதிர் கால வெளிநாட்டுக் கொள்கை குறித்த கவலை ஏற்பட்டுள்ள நிலையில் திரு அபேயும் திரு டிரம்பும் சந்தித்துப் பேசவுள்ளனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, திரு டிரம்ப் தனது வழக்கமான குறைகூறல்களை குறைத்துக் கொண்டாலும் தேர்தல் பிரசாரத் தின்போது, அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளான ஜப்பானையும் தென்கொரியாவை யும் கடுமையாகச் சாடியிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!