கோலாலம்பூர்: மலேசியாவில் நாளை பெர்சே அமைப்பும் சிவப்பு நிற சட்டை இயக்கத்தினரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள வேளையில் வன்முறையை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் எச்சரித்துள்ளார். திரு நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக பெர்சே அமைப்பும் அரசாங்கம் சாரா அமைப்புகளும் நாளை கோலாலம்பூரில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.
அந்தப் பேரணியில் மக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவும் பெர்சே பேரணிக்கு மலேசியர்கள் திரளாக வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நாளை அவர் வெளிநாட்டில் இருப்பார் என்ற போதிலும் பெர்சே பேரணிக்கு அவர் தமது ஆதரவை தெரி வித்துக் கொண்டுள்ளார். பெர்சே பேரணிக்கு எதிராக பேரணி நடத்தவுள்ளதாகவும் பெர்சே ஆதரவாளர்களுக்கு எதி ராக போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாகவும் அம்னோ ஆதரவு பெற்ற சிவப்பு நிற சட்டை இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.