துருக்கி சுரங்கத்தில் நிலச்சரிவு: மூவர் பலி

அங்காரா: துருக்கி நாட்டின் சிர்ட் மாநிலத்திற்கு உட்பட்ட சிர்வான் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான செம்பு சுரங்கம் ஒன்றுள்ளது. வழக்கம்போல் இந்தச் சுரங்கத்தில் நேற்று சுரங்க ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்க மேல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து மண் மேடாகியது.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் வெளியில் கொண்டுவந்தனர். சுரங்கத்தினுள் சிக்கியுள்ள இன்னும் 13 தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் நடவடிக்கை யில் மீட்புக் குழுவினர் மும்முர மாக ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

துருக்கியில் ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ள வேளையில் சுரங்க ஊழியர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அந்த இடத்தில் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!