அபே: டிரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது

அமெரிக்க அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். திரு டிரம்புடன் நம்பிக்கை தரும் உறவை கட்டிக்காக்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக திரு அபே கூறியுள்ளார். நியூயார்க்கில் திரு டிரம்பை சந்தித்துப் பேசிய பிறகு திரு அபே இவ்வாறு கூறினார்.

திரு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை சந்தித்துப் பேசியுள்ள முதல் வெளிநாட்டுத் தலைவர் திரு அபே ஆவார். நியூயார்க்கில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்ததாக திரு அபே கூறி யுள்ளார். பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுநடத்த மீண்டும் சந்திக்க இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். இந்தச் சந்திப்பிற்கு பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக நடைபெறுவது போல அமெரிக்க வெளியுறவு அமைச் சின் ஏற்பாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்கவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை