மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரி மியர் லீக் ஆட்டத்தில் இன்றிரவு மான்செஸ்டர் யுனைடெட் குழு வும் ஆர்சனலும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் யுனை டெட்டின் நட்சத்திர வீரர் ஸ்லாட் டான் இப்ராகிமோவிச் காயம் காரணமாகக் களமிறங்க முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தகவல் ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கருக்கு ஆறுதல் அளிப்ப தாக தெரியவில்லை. மாறாக, யுனைடெட்டின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட்டை மிரட்டலாக அவர் கருதுகிறார்.
"கடந்த ஆண்டு நடைபெற்ற யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வி யைத் தழுவியதற்கு ரேஷ்ஃபர்ட் தான் முக்கிய காரணம். அவர் அற்புதமாக விளையாடி அனை வரையும் வியப்பில் ஆழ்த்தினார்," என்று வெங்கர் கூறினார்.