வலுவான நிலையில் இந்திய அணி

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 455 ஓட்டங்களைச் சேர்த்தது. அணித் தலைவர் விராத் கோஹ்லி 167 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிக ஓட்டங்கள் குவித்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, ஒரே ஆண்டில் மூன்று இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நழுவ விட்ட ஏமாற்றம் அவருக்குக் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சேத்தேஸ்வர் புஜாரா (119), ரவிச்சந்திரன் அஸ்வின் (58) இந்தியாவின் ஓட்ட எண்ணிக் கையை வெகுவாக உயர்த்த கைகொடுத்தனர். அடுத்து பந்தடித்த இங்கி லாந்துக்கு ஆரம்பத்திலேயே சோதனை. அணித் தலைவர் அலெஸ்டர் குக் வெறும் இரண்டு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முகம்மது ஷமி அவரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றி னார்.

இங்கிலாந்தின் மொயீன் அலியுடைய விக்கெட் சாய்ந்ததை அடுத்து கொண்டாட்டத்தில் இறங்கும் இந்திய அணியினர். படம்: ராய்ட்டரஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!