வியூகம் குறித்து மௌனம் காக்கும் சுந்தரமூர்த்தி

சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் பிலிப்பீன்சுக்கு எதிராக சிங்கப்பூர் இன்றிரவு 8 மணிக்குக் களமிறங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதி வரை சென்ற பிலிப்பீன்ஸ் குழுவை இன்றிரவு முறியடிக்க தாம் வகுத்துள்ள வியூகம் குறித்து சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி மௌனம் காத்து வருகிறார்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா வில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது இன்றைய ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி கையாளும் உத்திகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப் பட்டன. ஆனால் இதுகுறித்து சுந்தரம் பட்டும் படாமல்தான் பதிலளித்தார். “பிலிப்பீன்சுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் முழு மூச் சுடன் தாக்குதலில் இறங்கக் கூடும். அல்லது தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும்,” என்று செய்தியாளர்களிடம் சுந்தரம் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்