பாகிஸ்தானிடம் ரூ. 500 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள்

புதுடெல்லி: பாகிஸ்தானின் ‘ஐஎஸ்ஐ’ உளவு அமைப்பு, ஏராளமான அளவுக்கு ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளைக் குவித்து வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 500 கோடி ரூபாயாக இருக்கும் என்று நம்பப் படுகிறது. இந்நிலையில் ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசு அறிவித்து விட்டதால் பழைய நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அமைப்பின் அதிகாரிகள் திண்டாடுவதாகவும் கூறப்படு கிறது.

ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்கு ஒரு பக்கம் ஆதரவு குவிந்தாலும் மறுபக்கம் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இருப்பினும் இந்த முயற்சியை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள சில பத்திரிகைகள் மோடி யின் பொருளியல் சீர்திருத்தத்தைப் புகழ்ந்து கட்டுரைகளை வெளி யிட்டுள்ளன. இதற்கிடையே மோடியின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் சில கட்சி களைப் போல பாகிஸ்தானும் பழைய நோட்டுகளை வைத்துக் கொண்டு தவிக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்