ஹைதராபாத்: ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் தரையில் கணவரை மனைவி இழுத்துச் சென்றதால் பலர் அதிர்ச்சி அடைந்தனர். குண்டக்கல் மருத்துவ மனையில் சக்கர நாற்காலியோ படுக்கை வண்டியோ இல்லாத தால் நோய்வாய்ப்பட்ட கணவரை மருத்துவரிடம் காட்டுவதற்காக அவர் மேல் மாடி வரை இழுத்துச் சென்றார். குண்டக்கல் திலக்நகரில் வசிக்கும் 49 வயது பி. ஸ்ரீனி வாசாசாரி ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத் தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் வீடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுபானங்களுக்கு அடிமை யான அவர் கடந்த மூன்று நாட்களாக வாந்தி-பேதி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது காலிலும் காயம் ஏற் பட்டிருந்தது.
மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால் நோய்வாய்ப்பட்ட கணவரை இழுத்துச் சென்ற மனைவி. படம்: இந்திய ஊடகம்