மோடிக்கு எதிராக புதிய கூட்டணி

புதுடெல்லி: ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டதால் பிரதமர் மோடிக்கு எதிராக புதிய கூட்டணி அமைத் துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டெல்லி முதல் வர் கெஜ்ரிவாலும் மூன்று நாள் கெடு விதித்துள்ளனர். டெல்லி அசத்புர் மண்டி பகுதியில் நடந்த பேரணியில் பேசிய இருவரும் ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை மூன்று நாளுக் குள் திரும்பப் பெற வேண்டும் என்று கெடு விதித்தனர்.

இதில் பேசிய மம்தா பானர்ஜி, நம் நாட்டில், நெருக்கடி நிலை காலத்தில்கூட இல்லாத கொடுமையை இப்போது மக்கள் அனு பவிக்கின்றனர். மத்திய அரசின் நடவடிக்கையால் நம் நாடு 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. மத்திய அரசு, நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த அரசு, மக்களுக்குச் சேவை செய்கிறதா அல்லது திருடர்களுக்குச் சேவை செய்கிறதா என்ற சந்தேகம் எழுந் துள்ளது," என்றார்.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை எதிர்க்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலும் திடீர் கூட்டணி அமைத்துள்ளனர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!