வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் துயர் துடைக்க ஆலோசனை

இந்த நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் அங்கு உள்ள தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் செல்லா நோட்டு களை மாற்ற முடியாமல் தவித்து வரும் நிலையில் அதற்கு விடை காண்பதற்காக பல அமைச்சுகள் சேர்ந்த குழு ஒன்றை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது. தங்களிடம் உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி என விளக்கம் கேட்டு டெல்லியில் உள்ள வெளி நாட்டு அமைப்புகள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், நாணய மாற்று வர்த்தகர்கள், இந்தியா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் ஆகியோ ரிடம் இருந்து நாள்தோறும் கேள்விகள் மொய்ப்பதாகக் கூறப்படு கிறது.

இதையடுத்து, “கூடுதல் செய லாளர் தலைமையில் பல அமைச்சு களின் அதிகாரிகள் சேர்ந்த குழுவைப் பொருளியல் விவகாரத் துறை அமைத்துள்ளது. செல்லா நோட்டு விவகாரத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சிரமத்தைப் போக்க அக்குழுவின் ஆலோசனை யும் பரிந்துரையும் நாடப்பட்டுள் ளது,” என்று நிதியமைச்சின் பேச் சாளர் விகாஸ் ஸ்வரூப் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு