பொருளியல் சூழலை அரசாங் கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தேவை ஏற்படின் உதவிபுரியத் தயங்காது என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார். "குறித்த இலக்குகளை அடை யும்விதமாக, குறிப்பிட்ட வழி களில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எடுத்துக் காட்டாக, தொழிலக உருமாற்றத் திட்டங்களையும் இப்போதைய பொருளியல் மந்தநிலையால் அல்லது கட்டமைப்பு மாற்றங் களால் பாதிக்கப்பட்ட ஊழியர் குழுக்களுக்கு அரசாங்கம் உதவி வருவதையும் திரு சான் குறிப்பிட்டார்.
பொருளியல் மந்தநிலையை எதிர்கொள்ள அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வரு வதை அவர் உறுதி செய்தார். "இன்னும் அதிகமாகச் செய்யவேண்டிய நிலை உருவா னால், வரும் மாதங்களில் இன்னும் அதிகமாகச் செய்வோம். அதே நேரத்தில் பொருளியல் சூழலையும் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம்," என்றார் தொழிற்சங்கக் காங் கிரஸ் தலைவருமான திரு சான்.