அண்மையில் வெளிவந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. இந்தப் படத்தின் நாயகி மஞ்சிமா மோகனைப் பார்த்து கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறாராம். கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் ஓரிரு நடிகைகள்தான் தோல்வியடைவார்கள். பலர் வெற்றி பெற்றுவிடுவார்கள். அந்த வகையில் அண்மைய வரவுகளில் மியா ஜார்ஜ், நிகிலா விமல் போன்ற சில கேரளத்து நடிகைகள் பெரிதாக பெயர் போடவில்லை.
இருந்தாலும் கௌதம்மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுடன் நடித்து வந்த மஞ்சிமா மோகனுக்கு அந்தப் படத்தில் நடிக்கும்போதே விக்ரம் பிரபுவுடன் 'முடிசூடா மன்னன்' மற்றும் கௌரவ் இயக்கும் படம் என இரண்டு படங்கள் புதிதாக ஒப்பந்தமாகிவிட்டன. தற்போது இவர் நடித்து வெளிவந்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' படம் வெற்றி பெற்றிருப்பதால் கொஞ்சம் தாமதித்தால் வெற்றியை முன்வைத்து மஞ்சிமா சம்பளத்தை உயர்த்திவிடுவார் என்று கடந்த சில தினங்களில் அவரை சில படங்களுக்கு ஒப்பந்தம் செய்துவிட்டனர் தயாரிப்பாளர்கள்.