விஜய் சேதுபதி கையில் ஆறு படங்கள் இருக்கின்றன. இதில் புஷ்கர் காயத்ரி இயக்கும் படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தில் விஜய் சேதுபதி மட்டுமின்றி மாதவனும் நடிக்கின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதி குண்டர் கும்பல் தலைவனாகவும் மாதவன் காவல்துறை அதிகாரி வேடத்திலும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படம் முழுவதும் சண்டையும் அதிரடிக் காட்சிகளும் இருக்குமாம். இப்படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்கிறாராம் தயாரிப்பாளர்.
இப்படத்தில் ஷரதா, வரலட்சுமி என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். ஆனால், இதில் ஒருவர் கூட விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லையாம். ஜோடியே இல்லாமல் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளாராம். நயன்தாரா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு சோதனையா என்று அவரின் ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.