பணம் மாற்றுவோருக்கு ‘மை’ வைக்க வேண்டாம்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: வங்கிகளுக்கு பணம் மாற்ற வரும் பெதுமக்களின் கை விரல்களில் அழியாத 'மை' வைக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பெது மக்கள் வங்கிகளுக்குச் சென்று மாற்றி வருகின்றனர். இதனிடையே, ஒரே நபர் பலமுறை பணத்தை மாற்றி வருவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகம் பணம் மாற்ற பல கட்டுப்பாடுகளைக் கெண்டு வந்தது.

இந்த நிலையில், பணம் மாற்ற வருபவர் களின் வலது கையில் உள்ள விரலில் 'மை' வைக்கப்பட்டு வருகிறது. அதுவும் அழியாத 'மை' வைக்கப் பட்டு வருகிறது. ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து பணம் மாற்றிச் செல்வதைத் தடுக்க 'மை' வைக்கப்படுவதாக அரசு தெரிவித்தது. ஆனால், தப்பித்தவறி வலது கை விரலுக்குப் பதில் தவறுதலாக இடது கை விரலில் 'மை' வைத்தால் தற்போது நடைபெற உள்ள 3 சட்டமன்றத் தெகுதி வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!