உலகப் பொருளியலில் இருந்து அமெரிக்கா தன்னை விடுவித் துக்கொள்ளும் பட்சத்தில் அந் நாடு கடந்த பல ஆண்டுகளாக உரமிட்டு வளர்க்க உதவிய உலக வர்த்தக அமைப்பு நிலைத் தன்மை அற்றதாகிப் போகும் அபாயம் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். "பல ஆண்டுகளாக தடை யற்ற வர்த்தகத்தை முடுக்கும் பொறியாக அமெரிக்கா இருந்து வருகிறது," என்றார் திரு லீ.
1960களில் இருந்து 1990கள் வரை பொருளியல் ஒருங்கி ணைப்புக்கு உந்துகோலாக அமெரிக்கா திகழ்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, உலக வர்த்தக நிறுவனம் போன்ற முக்கிய அமைப்புகளை நிறுவு வதிலும் அந்நாடு முக்கிய பங் காற்றியிருப்பதாகச் சொன்னார். உலகமயமாக்கத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பொருளியல் வளர்ச்சியை மேம் படுத்த முடியும் என்ற அவர், இருந்தபோதும் அமெரிக்கா அதில் பங்குபெறாவிடில் பெரிய ஒரு வாய்ப்பை உலகம் இழக்க நேரிடும் என்றும் கூறினார்.