ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் நேற்று மஞ்சள் சட்டைக்காரர்களின் பெர்சே பேரணி இடம்பெற்றது. முக்கியத் தலைவர்கள் முன்கூட்டியே கைது செய்யப்பட்டபோதும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது (ஒலிவாங்கியில் பேசுபவர்), முன்னாள் துணைப் பிரதமர் முகைதீன் யாசின் (மகாதீருக்கு இடப்புறம்), மகாதீரின் மகனும் கெடா மாநில முன்னாள் முதல்வருமான முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
கொடுங்கோலாட்சியை அகற்றும் தருணம் வந்துவிட்டது என்று முழங்கிய மகாதீர், பிரதமர் நஜிப் பொதுமக்களின் பணத்தைக் களவாடிவிட்டார் என்றும் நாடு திருடர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார். மாலை 6 மணியளவில் பெருமழை கொட்டியதால் தேசிய கீதம் பாடி, கூட்டத்தினர் கலைந்து சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்