தாய்லாந்தில் ஒலிக்கும் தேவாரம்

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் அண்மையில் கால மானார். இதையடுத்துப் பட்டத்து இளவரசர் மகா வஜ்ர அலங்காரன் என்பவர் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய மன்னராக மகா வஜ்ர அலங்காரனுக்கு விரைவில் முடி சூட்டப்படும்போது, ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நிகழ்வு மீண்டும் நடைபெற உள்ளதாம்! அந்த நிகழ்வுக்கும் செம்மொழியாம் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்த சுவாரஸ்யமான செய்தி வருமாறு:

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து தாய்லாந்திற்குக் குடியேறிய சிலர், அங்கு மன்னர் வம்சத்தின் ராஜகுருக்களாகப் பணியாற்றத் தொடங்கினர். இவர்கள் புதிய மன்னர் முடி சூட்டப்படும்போது, தலைமுறை தலைமுறையாக மந்திரங்களை ஓதி வருகின்றனர். ஆனால், இந்த மந்திரங்கள் எந்த மொழியில் உள்ளன, அவற்றின் பொருள் என்ன என்பது குறித்து அவர்களுக்கே தெரியாத நிலை தொடர்கிறது. இந்நிலையில், 1966ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து தமிழ் அறிஞர் ஜான் மார், மலேசிய பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் சிங்காரவேலு, மூதறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகியோர் அடங்கிய குழு, தாய்லாந்து ராஜகுருக்களின் மந்திரங்களை ஒலிநாடா வில் பதிவு செய்து ஆய்வறிக்கையாக வெளியிட்டது. அந்த மந்திரங்கள் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா..." என்ற தேவாரப் பதிகங்கள் (7ஆம் திருமுறை) என்று தமிழ் அறிஞர் குழுவினர் அறிவித்து, மாநாட்டில் கூடியிருந்தோருக்கு வியப்பு கலந்த பெரு மகிழ்ச்சியை அளித்தனர். இதேபோன்று பல தேவாரப் பதிகங்கள் ஒலி மாறி அந்த மந்திரங்களில் இருக்கின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!