வெட்டி வேர் மூலிகையில் காலணி

மக்கள் மத்தியில் எப்போதுமே இயற்கை முறையில் தயாரான பொருள்கள் என்றால் அதற்கு மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருக்கும். அதை நிரூபிக்கும் விதமாக மூலிகை புடவைகள், பைகள், மூலிகை மருந்து வகை களைத் தொடர்ந்து இப்போது புது வரவாக வந்துள்ள வெட்டிவேர் மூலிகை காலணியும் மக்கள் பலரையும் ஈர்த்து வருகிறது. இந்தக் காலணி உடலின் வியர்வையையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்கிறார் ‘இந்தியன் வெட்டிவேர் நெட்வொர்க்’ மூலம் வெட்டிவேர் காலணிகளை விற்பனை செய்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த். பழங்கால வைத்தியத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த வெட்டி வேர் குருவேர், உசிர், வீராணம் எனப் பல பெயர்களால் அழைக்கப் படுகிறது. புல் இனத்தைச் சேர்ந்த இந்த வெட்டிவேர் அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்