பாடல் பாடி, நடனம் ஆடி, இசைக் கருவிகளை இசைத்து நேற்று முன்தினம் இரவு, நல்ல செயலுக் காக தங்கள் திறனை இளையர்கள் வெளிப்படுத்தினார்கள். 150க்கும் மேற்பட்ட இளம் பிள்ளைகள் ஒன்றிணைந்து சிறார் களுக்கான இசை நிகழ்ச்சியைப் படைத்து $2 மில்லியன் நிதி திரட்டினர். ஆண்டுதோறும் நடத்தப்படும் 'சைல்ட் எய்ட்' என்ற இந்த நன் கொடை இசை நிகழ்ச்சியின் இந்த ஆண்டின் கருப்பொருள் 'கனவு களை வாழ்தல்.' நிகழ்ச்சியின் கருப்பாடலான 'ஏ வேர்ல்டு டு இமேஜின்' என்ற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி மூலம் மொத்தம் $2,049,147 நிதி திரட்டப்பட்டது.
'ரேவ் ஹார்பர்ஸ்' என்ற உள்ளூர் இசைக் குழுவினர் 'ஹார்ப்' (Harp) என்ற நரம்பிசைக் கருவி இசையுடன் கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். நடுவில் 11 வயது மாணவி சில்வியா டான் கூசெங் (guzheng) என்ற கருவியை வாசிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்