ரவி பார்கவன்: தனித்துவம் பாதிக்கப்பட்டதில் காதலும் ஒன்று சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பலவற்றில் தனித் துவம் பறிபோயிருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டிருப்பதில் காதலும் ஒன்று. அந்தப் பாதிப்புகள் என்ன? அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் 'கடைசி பெஞ்ச் கார்த்தி' படத்தின் கதை என் கிறார் இயக்குநர் ரவி பார்கவன். மும்பை, ஆந்திரா, கேரள வரவுகளே தமிழ் சினிமாவில் நாயகிகளாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நமீதா, ரிச்சா கங்கோபாத்யாய் உள்ளிட்ட ஒரு சிலரே அவ்வப்போது பஞ்சா பில் இருந்து வருகின்றனர்.
அவ்வகையில் பஞ்சாப் இறக்குமதி யாக தமிழுக்கு வந்திருக்கிறார் ருஹானி ஷர்மா. பஞ்சாபில் இசை ஆல்பங்களில் நடித்து வருபவரும் மாடல் அழகியுமான ருகானி ஷர்மா 'கடைசி பெஞ்ச் கார்த்தி' படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு வருகிறார். வடநாட்டு நாயகி என்றதும் பாலிவுட் நடிகைகளைத் தேர்வு செய்யும் வழக்கத்துக்கு மத்தியில் இயக்குநர் ரவி பார்கவன் இவரைப் பஞ்சாபில் இருந்து தேர்வு செய்திருக்கிறார். நாயகனாக பரத் நடிக்கிறார்.
பஞ்சாப் அழகி ருஹானி ஷர்மா, பரத். படங்கள்/ செய்திகள்: ஊடகம்