உள்ளூர் போலிசாகிறதா உலக போலிஸ்?

உலகையே தன் தோளில் சுமந்து உலக போலிசாக கட மையாற்றி வருகின்ற நாடு அமெரிக்கா. உலகில் தன் னைப்பேணித்தனம் கூடாது என்றும் சுதந்திரம், சகிப்புத் தன்மை, ஒளிவுமறைவு இல்லாத போக்கு ஆகிய பொது வான, மிதவாத கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண் டும் என்றும் நாடுகளை அன்பாகவும் அதட்டியும் மிரட்டியும் ஒடுக்கியும் வந்துள்ள நாடு அமெரிக்கா. இப்படிப்பட்ட ஒரு நாடு, தன்னைப்பேணித்தனம்தான் மிகமிக முக்கியம் என்று வலியுறுத்திக் கூறிவந்துள்ள ஒருவரைத் தன் தலைவராக இப்போது தேர்ந்தெடுத்து இருக்கிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டோனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேராமல் விலகியிருப்பது என்று பிரிட்டிஷ் மக்கள் முடிவு எடுத்து அதனால் ஏற் படக்கூடிய பொருளியல், அரசியல் பாதக விளைவுகளை உலகம் அசைபோட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அடுத்த அதிர்ச்சியாக அமெரிக்காவில் திடீரென்று டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டார். அமெரிக்கா இதுவரை கடைப்பிடித்துவந்த கொள்கை, கோட்பாடுகளிலிருந்து மாறிச் சென்று அமெரிக்காவின் நலனை மட்டுமே கவனிக்கப்போவதாக தேர்தலில் பிரசாரம் செய்தவர் டிரம்ப்.

பொருளியலைப் பொறுத்தவரையில் அமெரிக்கா தன் னைப்பேணித்தனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்; உலகத்தில் பல வட்டாரங்களிலும் அமைதியை ஏற் படுத்த ஆகும் செலவை அந்தந்த நாடுகள்தான் அதிகம் ஈடுசெய்ய வேண்டும்; அமெரிக்காவில் குடியுரிமைக் கொள்கை கடுமையாக்கப்படும்;

அமெரிக்கா செய்துகொள்ளும், செய்துகொண்டிருக் கும் தாராள வர்த்தக உடன்பாடுகள் எல்லாம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளைத் தேர்தல் பிரசாரத்தில் அள்ளிவீசிய டிரம்ப், அமெரிக்காவின் அதிப ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பல நாடுகளும் தடுமாறிப் போய்விட்டன. இத்தகைய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

பசிபிக் வட்டாரம் தழுவிய பங்காளித்துவ வர்த்தக உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த அமெரிக்காவுடன் சேர்ந்து பல ஆண்டுகாலமாக சிங்கப்பூர் உள்ளிட்ட பல ஆசிய பசிபிக் வட்டார நட்பு நாடுகள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அந்த உடன்பாட்டில் தனக்கு அக்கறை இல்லை என்று அறிவித்தவர் டிரம்ப்.

முழுவிவரம் - அச்சுப் பிரதியில்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!