டியோ: சமூகத்தில் வலுவான நம்பிக்கை முக்கியம்

நமது சமூகத்தினரிடையே நம்பிக் கையின் அளவை வலுப்படுத்துவது சிங்கப்பூரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய பண்பு களில் ஒன்று என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார். இதில் அண்டை வீட்டார், நண் பர்கள் ஆகியோருடன் சிங்கப்பூ ரின் அனைத்து சமூகத்தினரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ கூறினார். பொங்கோல் ஈஸ்ட்டில் நேற்றுக் காலை நடைபெற்ற பாசிர் ரிஸ்--பொங்கோல் குழுத் தொகுதியின் 'வீ ஆர் ஒன்' எனும் 'நாம் அனை வரும் ஒருவரே' சமூக கேளிக்கை விழாவில் சிறப்பு விருந்தினராக திரு டியோ கலந்துகொண்டார்.

பொங்கோல் நார்த் தொகுதி யின் உபசரிப்பு ஆலோசகரான கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங்கும் துணைப் பிரதமர் டியோவுடன் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரர் கள், புதிய குடிமக்கள் என சுமார் 1,200 பேர் கலந்துகொண்டனர். குடியிருப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவதிலும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்திக் கொள்வதிலும் கூடுதல் பங்காற்ற வேண்டும் என்று திரு டியோ வலியுறுத்தினார். "அப்போதுதான் சமூக ஒற்று மைக்கு எவ்வித மிரட்டல் வந்தா லும் அதை எளிதில் சமாளிக்கக் கூடிய மனவுறுதி எற்படும். "நமது அண்டை வீட்டார் யார், நமது புளோக்கில் குடியிருப்பவர் கள் யார் என்பதை அறிந்துகொள் வதில் குடியிருப்பாளர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!