இந்தோனீசியாவை வீழ்த்திய தாய்லாந்து

மணிலா: இவ்வாண்டின் சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தோனீசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 எனும் கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளர் தாய்லாந்து வாகை சூடியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தாய்லாந்தின் நட்சத்திர வீரர் தீராசில் டங்டா மூன்று கோல்கள் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார். மின்னல் வேகத் தாக்குதல்களை நடத்திய தாய்லாந்து, இந்தோனீசியத் தற்காப்பை நிலைகுலையச் செய்தது. இந்தோனீசியா இரண்டு கோல்கள் போட்டும் அக்குழுவால் தோல்வியின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் போனது. தாய்லாந்து தனது அடுத்த ஆட்டத்தில் சிங்கப்பூரை நாளை மறுநாள் சந்திக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்