விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியும் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் சிறப்பாகச் செயல்பட்டனர். இதன் விளைவாக இந்தியா தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியாவின் அபாரப் பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணியால் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பந்தடித்த இங்கிலாந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தாதபடி இந்தியப் பந்துவீச்சாளர்கள் பார்த்துக்கொண்டனர். பென் ஸ்டோக்ஸ் (70), ஸ்டூவர்ட் புரோட் (13), ஜேம்ஸ் ஆண்டர்சன் (0) ஆகியோரின் விக்கெட் டுகளை நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் சாய்த்தார். இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட்டில் அவர் இதுவரை ஐந்து விக்கெட் டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்தின் வீக்கெட்டைச் சாய்த்த அஸ்வின் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்