சிங்கப்பூருக்கான ஒலிம்பிக் போட் டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜோசஃப் ஸ்கூலிங், நீ ஆன் சிட்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 'மெக்-எ-விஷ்' அறநிறுவனத்தால் பலனடைந்து வரும் ஐந்து சிறாருடன் இணைந்து வாட்சன்ஸ் நிறுவனத்தின் 'டிரீம் டிரீ' திட்டத்தைத் தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்கூலிங், இந்த சமுதாயத் தால் பலனடைந்த ஒருவர் அதற் குத் திருப்பிப் பங்களிப்பது முக் கியம் என்பதை வலியுறுத்தினார். அவரைக் காண ஏறத்தாழ 100 பேர் நீ ஆன் சிட்டிக்குத் திரண் டிருந்னர். குறிப்பிட்ட சில வாட்சன்ஸ் கடைகளுக்கு வெளியே வைக்கப் பட்டுள்ள மர அலங்காரங்களில் தங்கள் விருப்பங்களைக் குறிப்பிட அந்த நிறுவனத்தின் 'மெக்- எ-விஷ்' திட்டம் பொதுமக்களை ஊக்குவிக்கிறது.
'மெக்-எ-விஷ்' அறநிறுவனத்தால் பலனடைந்து வரும் 11 வயது பிராயன் லியூவுடன் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: வாட்சன்ஸ் சிங்கப்பூர்