நியூயார்க்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள டோனல்ட் டிரம்ப் தம் மீது தொடுக்கப்பட்ட டிரம்ப் பல்கலைக் கழக வழக்குகளின் தொடர்பில் 25 மில்லியன் டாலர் தீர்வுத் தொகை செலுத்த இணங்கி உள்ளார். முன்னதாக, தேர்தல் பிரசாரத் தின்போது இந்தத் தொகையைச் செலுத்தப்போவதில்லை என்று டிரம்ப் கூறி வந்தார். இதன் மூலம் வெள்ளை மாளிகையில் அதிபர் பொறுப்பு ஏற்பதற்கான டிரம்ப்பின் ஏற்பாடு கள் சுணக்கமின்றி நடக்கும் என்றும் இதனால் அவருக்கு ஏற் பட்ட மனச் சங்கடங்கள் விலகும் என்றும் டிரம்ப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தற்போது செயல்பாட்டில் இல் லாத வணிகக் கல்வி நிறுவனமான டிரம்ப் பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவர்கள் நியூயார்க் கிலும் கலிஃபோர்னியாவிலும் டிரம்ப் மீது மோசடி வழக்குகளைத் தொடுத்து இருந்தனர். அங்கீகாரம் பெறாத பயிற்சித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பல்கலைக் கழகத் தில் நடப்பில் இருந்ததாகவும் அதனால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அம்மாணவர்கள் அந்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் இதற்காக கிட்டத்தட்ட 35,000 டாலர் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.