பல்லாயிரம் பேர் திரண்ட எதிர்ப்புப் பேரணி

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் நேற்று நடந்த அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பல பில்லியன் டாலர் மோசடிக்குப் பொறுப்பேற்று பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகக் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஜனநாயக சீர்திருத்தக் குழு வான பெர்சே இப்பேரணியை முன்னின்று நடத்தியது. நஜிப்புக்கு எதிராகக் கடந்த 15 மாதங்களில் அந்த அமைப்பு நடத்திய இரண் டாவது பெரும் போராட்டம் இது என கருதப்படுகிறது. மஞ்சள் சட்டை அணிந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு தலைநகர் கோலாலம்பூர் நோக்கிச் சென்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே அணிவகுத்துச் சென்ற அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

பெர்சே பேரணிக்கு எதிராக சிவப்புச் சடை ஆதரவாளர்களும் நேற்று பேரணி நடத்தினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!