பார்வை இல்லாத அனுபவம் பெற...

பார்வை இல்லாதவர்கள் அன்றாட வாழ்வில் எத்தகைய சிரமங்களை எல்லாம் எதிர்நோக்குகிறார்கள் என்பதைச் சிறந்தமுறையில் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காக நேற்று 60க்கும் அதிகமான மக்கள் தங்கள் கண் களைக் கட்டிக்கொண்டு பொங்கோல் முழுவதும் பல இடங் களுக்கும் சென்று வந்தார்கள். அரசாங்க அமைப்புகள், பொங்கோல் அடித்தள அமைப்பு கள், எஸ்எம்ஆர்டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆகியவற் றைச் சேர்ந்த மொத்தம் 66 பேர் நான்கு நான்கு பேராக ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணம் செய்தார்கள்.

ஒவ்வொரு நால்வரிலும் இருவர் கண்களைக் கட்டிக் கொண்டனர். மற்ற இருவரில் ஒருவர் பார்வை குறை பாடுள்ள தூதுவர். மற்றொருவர் வழிகாட்டி. கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், தன் கண் களைக் கட்டிக்கொண்டு பொங்கோல் ஈஸ்ட்டிலிருந்து பொங்கோல் எல்ஆர்டி வரை பேருந்தில் சென்றார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் பின்னர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் தெரிவிப்பவை எதிர்கால நகரத் திட்டங்களிலும் கொள்கைகளிலும் இடம்பெறக்கூடும்.

கண்களைக் கட்டிக்கொண்டு வழிகாட்டி உதவியுடன் அமைச்சர் இங் சீ மெங் (வலது) பொங்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது