வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடி யிருப்புப் பேட்டைகளில் மனதைக் கவரக்கூடிய புதுப்புது புத்தாக்க யோசனைகளை அமலாக்கி வாழ் விடத்தை மேம்படுத்துவோருக்கு மேலும் உதவி கிடைக்க உள்ளது. அவர்கள் முன்னோடிகளாக இருந்து பல புத்தாக்க யோசனை களுக்கு உருவம் கொடுக்க அந்த உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய புத்தாக்க வல்லுநர் கள் இனிமேல் தங்கள் திட்டங் களைச் சோதித்துப்பார்க்க கையில் இருந்து பாதி பணத்தைச் செலவிட வேண்டிய அவசியமில்லை. இத் தொழில்துறை வல்லுநர்களின் ஆற்றல்களையும் அவர்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆண்டுதோறும் புத்தாக்க யோச னைகளுக்கான போட்டியை நடத்தி வருகிறது. அதில் வெற்றி பெறு வோர் இந்த உதவிகளைப் பெற லாம். 'சிறப்புமிக்க வீவக வாழ்க் கைக்கு மனங்கவர் யோசனைகள்' என்ற போட்டி 2011 முதல் நடந்து வருகிறது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தள்ளுவண்டியைச் சறுக்குப் பாதையில் பரிசோதித்துப் பார்க்கிறார். வீடமைப்பு வளர்ச்சிக் கழக தலைமை நிர்வாகி சியோங் கூன் ஹியன் (இடது) உடன் இருக்கிறார். படம்: சாவ் பாவ்