இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 66%

சென்னை: தமிழகத்தில் அரவக் குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங் குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியிலும் நேற்று வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணியோடு பிரசாரம் முடிவடைந்த நிலையில் நேற்றுக் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது. அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். இதற்கிடையே வாக்குப்பதிவு நிலவரங்களை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் ஆணையம் இணையத் தளத்தில் வெளியிட்டது.

அதன்படி காலை 8 மணி நில வரப்படி அரவக்குறிச்சி தொகு தியில் 9 விழுக்காடு வாக்குகளும் புதுச்சேரியில் உள்ள நெல்லித் தோப்பு தொகுதியில் 11 விழுக் காடும் வாக்குகள் பதிவாகி யிருந்தன. தஞ்சாவூரில் 61 விழுக்காடும் திருப்பரங்குன்றத் தில் 63 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி மூன்று தொகுதிகளிலும் சராசரியாக 65.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுவை நெல்லித்தோப்பில் 75.4% வாக்குகள் பதிவாகி யுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரு கிற 22ஆம் தேதி காலை எட்டு மணிக்குத் தொடங்குகிறது. பகல் 12 மணி அளவில் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!