சென்னைக்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டு

சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டுள்ள நிலையில் புதிய 2,000 ரூபாய் நோட்டு மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய நோட்டுகள் வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரு கின்றன.

ஆனால் புதிய 500 ரூபாய் நோட்டு இன்னமும் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. இதனால் ரூ. 100, ரூ. 50 நோட்டுகளையே மக்கள் பயன் படுத்த வேண்டியிருப்பதால் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ரூ. 2,000 நோட்டை மாற்ற முடியாமல் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வரு கின்றனர்.

மளிகைக் கடை, பெட்டிக் கடை, ஹோட்டல்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தால் ரூபாய் தட்டுப்பாடு பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகள் வடமாநிலங்களில் மட்டும் விநியோகிக்கப்பட்டுவரு கிறது.

சென்னை வங்கிகளில் புதிய ரூ. 500 நோட்டுகள் விநியோகிக்கப்படவிருப்பதால் மக்களின் சிரமம் ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!